PRIZE DISTRIBUTION DAY 2025-26

25.11.25 10:38 AM - By Sarada

 41 வது பரிசளிப்பு விழா
 நம் பள்ளி வளாகத்தில்  நடைபெற்ற 
 பேராசிரியர் பொற்கிழி கவிஞர் திரு சொ சொ மீ சுந்தரம்
அவர்களும் பேராசிரியர்.கு. ராமமூர்த்தி கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


பேராசிரியர்.கு. ராமமூர்த்தி அவர்களும் பேராசிரியர் பொற்கிழி கவிஞர் திரு சொ சொ மீ சுந்தரம் (மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்பரிசளித்து விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்)


                                                                      நம் பள்ளி வளாகத்தில்நடைபெற்ற  41 வது பரிசளிப்பு விழாவில்  

                                                                            பேராசிரியர். பொற்கிழி கவிஞர் திரு சொ.சொ. மீ சுந்தரம்
                                                                            அவர்களும்பேராசிரியர்.கு.ராமமூர்த்திஐயாஅவர்களும்

                                                கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவர்கள் பரிசளித்து விழாவில் சிறப்பித்தனர்.

                  பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த பேராசிரியர் பொற்கிழி கவிஞர் எழுத்தாளர் ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முகத் திறமை கொண்ட திரு சொ.சொ.மீ. சுந்தரம் அய்யா அவர்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறோம். வான் கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித்தீஞ்சுவைகலந்து உன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே என்றார் வள்ளலார் எப்படி வள்ளலாரின் ஊனிலும் உயிரிலும் திருவாசகம் கலந்து இருந்ததோ அதேபோல் அய்யாவின் ஊனிலும் உயிரிலும் திருவாசகம் கலந்திருக்கிறது என்பதற்கு சான்று அவரது இல்லத்திற்கு திருவாசகம் என்று பெயர் சூட்டியதிலிருந்தும் அவரது அறுபது ஆண்டு நிறைவு விழாவை திருவாசக விழா என்று கொண்டாடியதிலிருந்தும் நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. திருவாசகத்திற்கு முழுவதும் உரை எழுதி முடித்து விட்டார் திருமந்திரத்திற்கு உரை எழுதிக் கொண்டிருக்கிறார் இவரை உலகம் சுற்றும் வாலிபன் என்று பலரும் கேலியாக சொல்வது உண்டு . ஆனால் உலகத்தை சுற்றி வருவது எல்லாம் சைவ திருமுறைகளை உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைக்க வேண்டும் என்பதை இவரது நோக்கமாக இருக்கிறது. ஆன்மீக சொற்பொழிவாளராக இருப்பதால் இவர் தமிழ் பேராசிரியர் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் இவர் வணிகவியல் பேராசிரியர். இவரது எண்ணம் எழுத்தும் சிறக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் அருள் புரியும் திருமூவரும் அருள்புரிய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோம்.


41 வது பரிசளிப்பு விழாவில் பேராசிரியர். பொற்கிழி கவிஞர் திரு சொ.சொ. மீ சுந்தரம் ஆற்றிய உரையில் குழந்தைகளையும் ஆசிரியர்களையும் பரிசுவழங்கி அனைத்து மாணவர்களையும் பாராட்டி சிறப்பித்தார். அதுமட்டுமின்றி பல நல்ல கருத்துக்களையும் கூறினார். 

       அவர் கூறியதில் சில:

          கலை நிகழ்ச்சிகளை பற்றியும், குறிப்பிட்டு அதில் நடித்த குழந்தைகளையும்  அதைக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களையும்  பாராட்டினார்.  

                   அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் பற்றியும் அவர் தைரியத்தை பற்றியும் அவர்கள் மிக அழகாக எடுத்துக் கூறினார்.
                மகாத்மா காந்திஜி  எளிமையை பற்றியும் அவரது தைரியத்தைப் பற்றியும் அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை  கதை போல் கூறினார்,பகைவனுக்கும் அருளவேண்டும் என்று மிக அழகாக கூறினார்,பல கருத்துக்களை கூறி மூவரின் ஆசையுடனும், சித்தவானந்தர் அருளுடனும் மிக சிறப்பான கருத்துக்களை கூறி    தனது உரையை முடித்தார்.

Sarada