
நம் பள்ளி மாணவிகள் கிருஷ்ணராகவும் ராதையாகவும் நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.
கிருஷ்ணராக ராதையாகவும் முரளிதர கௌதம நடனம் ஆடினர்.
குழந்தைகளுக்கு தமிழ் ஆசிரியர் திருமதி பொன்னி கிருஷ்ண லீலைகளை பற்றி கதையாக கூறினார்.
பாலர் வகுப்பு குழந்தைகளும் கிருஷ்ணராகவும் ராதையாகவும் வேடமிட்டு குழு நடனம் நடத்தி குழந்தைகளை மகிழ்வித்தனர்.
பாலர் வகுப்பு ஆசிரியர்களால் கிருஷ்ணருக்கு பலவித பட்சணங்களோடு நெய்வேத்தியம் செய்து ஆரத்தி காண்பிக்கப்பட்டது
குழந்தைகள் கண்ணனின் பிறந்த தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
பள்ளி முதல்வர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினார்.