கருணை உள்ளமே கடவுள் வாழும் இல்லம்
"கருணை பொங்கும் நெஞ்சம், அது கடவுள் வாழும் இல்லம்.
சிலர் கருணை மறந்தே வாழ்கின்றனர்.
சிலர் கடவுளைத் தேடி அலைகின்றனர்."
அன்னை ஸ்ரீ சாரதாதேவியார் ஆன்மீகம் மூலமாக தனது கருணையை உலக மக்களுக்கு எடுத்துக் கூறியவர். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உலக மக்களுக்கு சேவை செய்வதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் .
அன்னை ஸ்ரீ சாரதாதேவியார் வழித்தோன்றல்களாக மதுரை ஸ்ரீ சாரதா சமிதியின் அம்பாக்கள் மூவரும்
சேர்ந்து அன்னையார் தினத்தை (26-12-21) மிகச் சிறப்பாகவும் செம்மையாகவும் வழி நடத்தி அன்னையாரின் அருளை நம் அனைவருக்கும் பெற்றுத் தந்தனர்.
மதுரை ஸ்ரீ சாரதா சமிதியின்
அன்னையார் தின சேவைகள்
அன்னையார் ஸ்ரீ சாரதாதேவியின் பிறந்தநாளன்றுஅம்பாக்கள் மூவரும் ஸ்ரீ சாரதா வித்யாவனம் பள்ளியில் பணிபுரியும் சில ஆசிரியர்களின் துணை கொண்டு நமது ஆசிரமத்திற்கு அருகில் உள்ள 10 கிராமங்களில் உள்ள ஏழை எளியகல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் போன்றவற்றை இலவசமாக வழங்கினர்.