சத்தியத்தின் மூலம் இறைவனை உணர முடியும்.
"கடவுள் எல்லா மக்களிலும் வசிப்பதால், தேவைப்படுபவர்களுக்கு உதவுவது இரக்கத்தால் அல்ல (இரக்கத்தின் மனப்பான்மை) கடவுளுக்கு பணிவான சேவையாக இருக்க வேண்டும்."
- இராமகிருஷ்ண பரமஹம்சர்.
மதுரை சாரதா சமிதியில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா
ஸ்ரீ பிலவ வருடம் , மாசி 21 தேதி வெள்ளிக்கிழமை அன்று
சிறப்பாகக்கொண்டாடப்பட்டது
நிகழ்ச்சி நிரல்:
காலை: 10.00 - 10.45 : ஹோமம்
10.45 - 11.00 : சொற்பொழிவு
ஸ்ரீமத் அத்யாத்மா னந்த சுவாமிஜி அவர்கள்
11.00-11.50 : பஜனை
11.50-12.00 : அர்ச்சனை
: ஆரத்தி
இனிதே சிறப்பித்து கொண்டாடப்பட்டது.
சொற்பொழிவு:
"ஸ்ரீமத் அத்யாத்மா னந்த சுவாமிஜி"
அவர்கள் உரை நிகழ்த்தினார்."நம்முடைய பாரத பூமி பூமியில் தர்மம் சீர்குலைந்து போனது அதர்மம் மேலோங்கியிருக்கும்பொழுது கடவுள் அவதாரமாக தோன்றினார் எதற்காக என்றால் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக தர்மத்தைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் மாணவச் செல்வங்களுக்கும் மற்றும் கூடியிருக்கும் அனைவருக்கும் அதன் சிறப்பினை மிக தெளிவாகவும் அனைவருக்கும் புரியும் வண்ணம் கதைகள்மூலமாக சொற்பொழிவு நிகழ்த்தினார்".
நம் பள்ளி முதல்வர் தலைமையில் தமிழ் ஆசிரியர் திருமதி பொன்னி அவர்கள் பள்ளி மாணவிகளுக்கு குரு மகராஜ் சிறப்பினையும் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வையும் எடுத்துரைத்தார்கள்.
குரு மஹராஜ்
மேற்குவங்காளத்தில் உள்ள கமார்புகூரில் க்ஷீதிராம் ஷட்டர் ஜிக்கும், சந்திரமணி தேவிக்கும் மகனாக பிறந்தார். கயையிலுள்ள கதாதரர் அருளால் பிறந்தமையால் இவருக்கு கதாதரர் என்ற நாமம் சூட்டப்பட்டது. சிவன் அருளும் இவருக்கு கைகூடியே இருந்தது. ஸ்ரீராமகிருஷ்ணரின் மனதில் கருணை நிறைந்து இருந்தது. ஜாதி மத பேதம் சிறிதும் இல்லாமல் இருந்தது ராமகிருஷ்ணரது உள்ளம் .
குரு மகராஜ் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு:
இல்லறத்தான் ஒருவன் நான் கடைத் தேடுவதற்கான வழி ஒன்றை சொல்லுங்கள் என்று குருதேவரிடம் வேண்டி நின்றான்.அதற்கு குருதேவர் பக்தியும், நம்பிக்கையும் வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக் கொள் என்றார் .அவனும் சரி என்றான். இன்னும் சற்று விளக்கமாக சொல்ல நினைத்தார். அதற்கு ஒரு சிறுகதை. விபீஷணனிடம் ஒருவன் பெரிய கடலைக் கடப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.அதற்கு விபீஷணன் ஒரு சிறு இலையில் ராமநாமம் எழுதி முடிச்சு ஒன்று போட்டு அவனுடைய ஆடையின் ஒரு பகுதியில் கட்டி விட்டான். இந்த முடிச்சைப் பிடித்து கொண்டே கடலைக் கடந்து விடலாம் என்றான். எக்காரணம் கொண்டும் இந்த முடிச்சை அவிழ்த்து விடக்கூடாது என்றான். அவனும் முடிச்சை பிடித்துக்கொண்டே கடலைக் கடந்தான் நடுக்கடலை சென்றடைந்தபோது அவனுள் ஏற்பட்ட ஒரு ஆர்வத்தின் காரணமாக முடிச்சில் என்ன இருக்கிறது என்று பார்க்க எண்ணினான். நடுக்கடலில் நின்று கொண்டு முடிச்சை அவிழ்த்து அதில் என்ன இருக்கிறது என்று பார்த்து விட்டான். அதில் ராம நாமம் மட்டுமே எழுதப்பட்டிருந்தது. அதற்கு அவன் ப்பூ இவ்வளவுதானா இதையா பிடித்துக்கொண்டு இவ்வளவு தூரம் வந்தேன் என்று நினைத்தான். நினைத்த பொழுதே அவனிடம் இருந்த நம்பிக்கை அவனை விட்டுச் சென்றுவிட்டது. அடுத்த நொடி அவன் கடலில் மூழ்கிப் போனான். நாம் எல்லோருக்கும் சொல்லுகின்ற ஒரு செய்தி என்னவென்றால்பக்தியோடு நம்பிக்கையும் வேண்டும் என்பதுதான். நம்பிக்கை இருந்தால் தன்னம்பிக்கை இருந்தால் நாம் வாழ்க்கையில் உய்வடையலாம் என்று இறைவன் நமக்குசொல்லி இருக்கின்றார் இந்த நல்ல நாளில் அவர் சொல்லியதை நாம் வாழ்க்கையில் கடைபிடித்து வாழ்வோம்.