நவராத்திரி விழா 2021
நவராத்திரி விழா 2021
இந்த ஆண்டு நம் கொலுவில் வீற்றிருப்பவள்
ஸ்ரீ துல்ஜாபூர்பவானி
மகாராஷ்டிர மாநிலத்தில் உஸ்மானாபாத் மாவட்டத்தில் துல்ஜாபூரில் கொலுவீற்றிருப்பவள் பவானி தேவி..
51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று . பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற கோவிலாகும்.
கோவிலின் சிறப்பு :
கோவிலின் சிறப்பு :
துல்ஜாபூரில் கோவில்கொண்டு அருள்பாலிக்கும் அம்பிகைஸ்ரீ துல்ஜா பவானி என்றும் மகிஷாசுரமர்த்தினி என்றும் அழைக்கப்படுகிறாள்.
உயர்ந்த கோபுரங்கள் ஒரு கல்லாலான இக்கோயில் ஒரு கோட்டை போன்று தோற்றம் அளிக்கின்றது.
சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் குலதெய்வமாக விளங்கிய அன்னை ஸ்ரீ துல்ஜா பவானி சத்துருக்களின் கோரத்தாண்டவத்தை அழிப்பதற்காக அவருக்கு வெற்றி வாளை அளித்து அருள் புரிந்ததாகவும் வரலாறு நமக்குச் சொல்கிறது.
பவானி தெய்வம் மகாராஷ்டிரா மக்களின் குலதெய்வமாகவும் வணங்கப்படுகிறாள்.
இக்கோவிலில் உள்ள பெரிய நீர்க்குண்டத்திற்கு கல்லோலதீர்த்தம் என்று பிரம்மன் பெயரிட்டார்